அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பெண்களே உங்களுக்குத்தான்!
Thursday, 21 February 2008
 காதலில் பெரிதும் ஏமாற்றப்படுபவர்கள் பெண்கள்தான் என்ற அபிப்ராயம் நம் எல்லோரிடமும் உண்டுதானே! ஆகவே! பெண்களே உங்கள் லைப் பார்ட்னரை தேர்வு செய்யும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே!

வாட்ட சாட்டமான ஆள், சிவப்பு கலர், பைக், பர்ஸில் கொஞ்சம் பணம் என வெளித் தோற்றத்தைப் பார்த்து காதல் கொள்ளாதீர்கள் கண்மணிகளே.  வசதியும், வாட்டசாட்டமான உடல்வாகும் என்றும் நிலையானதல்ல. ஒரு நோய் வந்தால் அழகும் நிறமும் காணாமல் போய்விடும்.

விவேகமான நல்ல ஆண்மகனா, அவனது வீட்டை அவன் எப்படிப் பார்த்துக் கொள்கிறான் இவற்றைத் தெரிந்து கொண்டு காதல் கொள்ளுங்கள்.

எதையுமே பார்க்காமல் வருவதுதான் காதல் என்பார்கள்! சரி! ஒருவரை காதலிப்பது என முடிவு செய்து விட்டால், மேற்கூறியவற்றை நினைவில் வைத்து பின் அவரை இறுதி செய்யுங்கள்.

சும்மா ஊர் சுற்றித் திரிபவரை காதல் செய்யாதீர்கள்.  எப்படியோ 'இம்ப்ரஸ்'  ஆகி காதலித்து விட்டீர்கள் என்றால் முடிந்தவரை அவரை பொறுப்புள்ளவராக்க வேண்டியது உங்களது கடமை. காதலின் வேகம் கல்லையும் கரையச் செய்யும். எனவே, அவரை நல்ல வேளை தேடச் சொல்லி முடுக்கி விடுங்கள்.

ஒரு சில ஆண்கள் உங்களது மனதைக் கவருவதற்காக ஆரம்பத்தில் சின்சியராக இருப்பது போலவும்,  பொறுமைசாலிகள் போலவும் இருக்கலாம். அவர்களுடைய ஒரிஜினல் முகத்தை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

முக்கியமான விஷயம், எப்போதுமே திருமணம் முடிவாகாதவரை பாலியல் ரீதியான எந்த உறவுக்கும் அனுமதியளிக்காதீர்கள்.

அது உங்களுக்குத்தான் பாதுகாப்பு. எதுவானாலும் திருமணத்திற்குப் பின்புதான் என ஸ்ரிட்டாகச் சொல்லி விடுங்கள்.

என்ன பெண்களே! இந்த டிப்ஸ் போதுமில்லையா! சமத்தா நடந்து கொள்வீர்கள் இல்லையா.














Comments (1)
RSS comments
16-10-2008 06:21
little advice; if you telling that u have fall in love but it failured, mistake is yours b'coz its your responsibility to find a valid feature,we cant gain our life again but we can find good guys way in your finger good luck
Written by sukanyavinod (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code