|
Tuesday, 04 March 2008 |
உங்கள் காதலர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ள, உங்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள 'காதல் மீட்டர்' என்ற சாப்ட்வேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். இங்க இல்லீங்க! தென் கொரியாவில். காதல் மீட்டர் போல செயல்படக் கூடிய இந்த சாதனத்தை பயன் படுத்தும் போது, மறுமுனையில் பேசுபவர்களின் உள்ள உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பது தெரிய வருமாம்.
பேசி முடித்த பிறகு மதிப்பெண் போடுவது போல, காதல் உணர்வு பற்றிய மதிப்பீடு எஸ்எம்எஸ் மூலம் நமக்கு வந்து சேருமாம்.
வீடியோ வசதியோடு இந்த காதல் மீட்டரை பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
காதலன் அல்லது காதலி தங்கள் மீது எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள இது உதவுகிறது.
பேச்சை அலசி ஆராய பயன் படுத்தப்படும் சாப்ட்வேர் உதவி யோடு இந்த காதல் மீட்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதனை செல்போன் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
|