அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
டெல்லியில் குஜ்ஜார் இன மக்கள் பந்த்
Thursday, 29 May 2008
 ஜெய்பூர் மே 29:

ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கக்கோரி குஜ்ஜார்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்றோடு ஆறாவது நாளை எட்டியுள்ளது. குஜ்ஜார்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை சம்பவங்களில் 38 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தற்போது தேசிய தலைநகர் டெல்லிக்கும் பரவி விட்டது. டெல்லி அருகே குர்கான் பகுதியில் நேற்ற சாலைகளில் டயர்களை எரித்தனர். கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தலைநகர் டெல்லி முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குஜ்ஜார் இனத்தவர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது மற்றும் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் அரியானா மாநிலங்களையும் மத்திய அரசு எச்சரித்து இருக்கிறது.

இது குறித்து குஜ்ஜார் இன தலைவர் பைன்சாலா கூறுகையில் காலதாமதம் ஏற்படுத்தாமல் குஜ்ஜார் இனத்தை சேர்ப்பது மட்டுமே போராட்டத்துக்கு முடிவாக அமையும் என்றார்.







Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code