| பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு? |
| Friday, 30 May 2008 | ||||
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 135 டாலராக உயர்ந்துவிட்ட நிலையில் விலையை உயர்த்தாமல் விற்வு ரும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி ரூ. 580 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ரூ. 2.25 லட்சம் கோடியை இழந்துவிட்டது.பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 16ம் டீசல் விலையை ரூ. 10ம் உயர்த்த வேண்டும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. முன்னதாக பெட்ரோல் விலையை உயர்த்தாமலேயே சிக்கலை தீர்க்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை நிமியமைச்சகம் ரத்து செய்தால் விலையை ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை என பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து வரியை முற்றிலும் குறைக்காமல் ஓரளவுக்குக் குறைப்பது எனவும் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சிறிது குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4ம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2 ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இவற்றின் மீதான சுங்க வரியைக் குறைக்கவும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 135 டாலராக உயர்ந்துவிட்ட நிலையில் விலையை உயர்த்தாமல் விற்வு ரும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி ரூ. 580 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ரூ. 2.25 லட்சம் கோடியை இழந்துவிட்டது.


