அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது:
Monday, 02 June 2008
 சென்னை ஜுன் 2:

பொது உடமை வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது என்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் உறுதி அளித்தார்.

யூகோ வங்கியின் அகில இந்திய ஊழியர்களின் கூட்டமைபப்பின் 13வது மாநாடு சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஷியாம் கோபால் தாஸ் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:

1997ல் யூகோ வங்கி ரூ. 211 கோடி நஷ்டத்தில் இயங்கியது. தற்போது அது ரூ. 412 கோடி நிகர லாபம் எட்டியுள்ளது. 1961 கிளைகளுடன் விளங்குகிறது.

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க 2003-04ம் ஆண்டு ரூ. 7000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 34000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாணவருக்கும் கல்விக் கடன் மறுக்கப்படாது.

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது என்று உறுதியளிக்கிறேன். ஸ்டேட் வங்கிக்கு நன்றாக இயங்க ரூ. 10000 கோடியை அரசு வழங்கி உள்ளது. அதுபோல யூகோ வங்கிக்கும் தேவைப்பட்டால் வழங்கும்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code