| அனைத்துக் கட்சி கூட்டம்: எதியூரப்பா |
| Tuesday, 03 June 2008 | ||||
புதுடெல்லி ஜுன் 3:ஒகேனக்கல் மற்றும் காவிரிப் பிரச்சினை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சிகளையும் கூட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார். டெல்லி வந்துள்ள எதியூரப்பா செய்தியாளர்களிடையே கூறுகையில் கர்நாடகத்தின் கலாச்சாரம் மொழி நிலம் நீர்வளம் ஆகியவற்றில் எந்த வகையிலும் சமரசத்திற்கு இடமில்லை. இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. கர்நாடக மாநில நலன்கள் ஒருபோதும் விட்டக் கொடுக்கப்பட மாட்டாது. அனைத்துப் பிரச்சனைகளிலும் கர்நாடகத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காணப்படும் என்றார். இது தொடர்பாக யாருடனும் மோதல் போக்கில் ஈடுபடமாட்டேன். இந்த ஆட்சியில் ஊழல் லஞ்சம் போன்றவை ஒழிக்க முழுமுணைப்போடு ஈடுபடுவேன். இந்தியாவிலேயே முழுமுதன்மையான மாநிலமாக பாடுபடுவேன். வளர்ச்சியடைந்த வலுவான உறுதியான கர்நாடகத்தை உருவாக்க ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் எனது அரசின் முடிவுகள் இருக்கும் என்றார். முக்கியமாக பெங்களுர் நகர வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் பெங்களுர் நகரை சர்வதேச நகரமாக மாற்றுவோம். உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படும் என்றார் எதியூரப்பா.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி ஜுன் 3:


