அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பெட்ரோல் டீசல் விலை: இன்று முடிவு
Wednesday, 04 June 2008
 புதுடில்லி: ஜுன் 4:

பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை இன்று முடிவு எடுக்கிறது. இன்று இரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக சமையல் காஸ் விலை ரூபாய் 20 வரை அதிகரிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சாஎண்ணெயின் விலை உயர்வு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தற்போதைய விலையில் சப்ளை செய்வதால் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வருவய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் ஜுலை மாதம் வரையே எண்ணை கொள்முதல் செய்வதற்கு மட்டுமே ரொக்கம் கையிருப்பு இருக்கிறது.

இந்தியன் ஆயிலைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதம் வரை கையிருப்பு உள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை உயர்த்தா விட்டால் நிலைமையை சமாளிக்க முடியாது என்று எண்ணை நிறுவனங்கள் கூறி வருகின்றன. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 10ம் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 5ம் எரிவாயு விலையில் சிலிண்டருக்கு ரூ. 50ம் உயர்த்துமாறு பெட்ரோலிய அமைச்சகம் பரிரிந்துரை செய்தது.

தற்போதுள்ள சூழ்நிலையில் விலைவாசி உயர்வு பொதுவாக பல தரப்பட்ட பொருட்களில் உள்ளதால் இந்தநிலையில் பெட்ரோல் டீசல் கேஸ் உயர்வு மத்திய அரசுக்கு நெருக்கடி நிலை உள்ளது.

இன்று காலையில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை கூட்டம் கூடுகிறது. அந்த கூட்டத்தில் பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வு குறித்து முக்கிய முடிவு காணப்படும். பெட்ரோல் ரூ. 4 அல்லது ரூ. 5 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 அல்லது ரூ. 3 அதிகரிக்கப்படும். சமையல் கியாஸ் விலை 14 கிலோ சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 20 அதிகரிக்கும்.

இன்று இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code