அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மிக குறைந்த அளவே விலை உயர்வு
Thursday, 05 June 2008
 புதுடெல்லி ஜுன் 5:

பெட்ரோல் டீசல் சமையல் கியாஸ்விலை உயர்த்தப்பட்டு இபர்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

அதில் கடந்த 2004ம் ஆண்டு 39 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணையின் விலை தற்போது 130 டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றபடி பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்தால் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டால் கச்சா எண்ணை வாங்குவதற்கு பணம் இருக்காது.

பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை ஓரளவே தான் குறைக்க முடியும். முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் செலவினங்கள் அபிவிருத்தி அல்லாத பிற திட்ட செலவினங்களையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை முற்றிலுமாக நீக்க வழியில்லை. எனவே பெட்ரோலிய பொருட்களின் மீதான உயர்வு தவிர்க்கமுடியாததாக உள்ளது.

தற்போதுள்ள விலையுயர்த்தம் 10 சதவீத அளவையே ஈடுசெய்யும் அளவாக உள்ளது. மீதமள்ள 90சதவீத இழப்பை மத்திய அரசும் எண்ணை நிறுவனங்களும்தான் தாங்கிக் கொள்ள வேண்டும்.

பெட்ரோலியப் பொருட்கள் மீது அதிக அளவில் விற்பனை வரி விதிப்பை மாநிலங்கள் அந்த வரியை குறைத்து சுமையை பகிர்ந்து கொள்ளவேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்காக அரசாங்கம் உண்மையிலேயே எவ்வளவு செலவிடுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதோடு மாற்று எரிபொருளையும் கண்டு அறிய வேண்டும் என்றார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code