அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ரெயில் கட்டணம் உயராது: லாலு
Friday, 06 June 2008
 புதுடெல்லி ஜுன் 6:

டீசல் விலை உயர்ந்துள்ள போதும் ரெயில் பயணிகளுக்கு கட்டணமோ சரக்கு கட்டணமோ உயராது என்று ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

ரெயில்வே துறை ஆண்டுதோறும் 227 கோடி லிட்டர் டீசலை பயன்படுத்துகிறது. தற்போது டீசல் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரெயில்வே துறைக்கு ஓராண்டுக்கு ரூ. 681 கோடி கூடுதல் செலவாகும் இதனால் இந்த நிதியாண்டில் அடுத்து வரும் 10 மாதங்களில் ரூ. 560 கோடி செலவு ஏற்படும்.

இதன்காரணமாக இந்த உயர்வின் பாதிப்பை பயணிகள் மீதோ அல்லது சரக்கு போக்குவரத்து சேவையை பயன்படுத்துபவர்கள் மீதோ சுமத்த ரெயில்வே அரசு விரும்பவில்லை எனவும் இச்சூழ்நிலையை சமாளிக்க சரக்கின் அளவை அதிகரிப்பதன் மூலமும் உற்பத்தி திறன் மூலமும் இந்த செலவை சரிக்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு லாலு கூறியுள்ளார்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code