அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
முலாயம்சிங் - மாயாவதி சந்திப்பு
Saturday, 07 June 2008
 சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங்கும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் 13 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர்.

இந்த அரிய சந்திப்பு லக்னோ நகரில் உள்ள முதல்-மந்திரி மாயாவதியின் அரசாங்க வீட்டில் நேற்று நடந்தது.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியை முறியடித்து மாயாவதியின் ஆட்சி தற்போது நடந்து வருகிறது. மாயாவதியின் வீட்டில் நடந்த மாநில மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் மாயாவதி முலாயம்சிங் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

45 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி எச்.கே.சீமா மனித உரிமை கமிஷன் தலைவராகவும் அலகாபாத் ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி விஷ்ணு சகாய் ஆஷா திவாரி ஆகிய 2 பேர் உறுப்பினர்களாகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code