| ஜுலை 2 முதல் லாரிகள் ஸ்டிரைக் |
| Monday, 09 June 2008 | ||||
டீசல் விலை உயர்வை கண்டித்து ஜுலை 2ம் தேதி இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுத்துள்ளனர். இது குறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் அதன் தலைவர் தரன்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் டீசல் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். சுங்க வரியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மத்திய அரசிடம் மனு கொடுக்கவுள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஜுன் 30ம் தேதி வரை அவகாசம் தருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜுலை 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார் சரன்சிங். லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் விலைவாசியும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையும் மிகவும் மோசமாகும் நிலை ஏற்படும்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

டீசல் விலை உயர்வை கண்டித்து ஜுலை 2ம் தேதி இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுத்துள்ளனர். 


