| எஸ்.டி.டி.கட்டணம் 50 சதவீதம் குறைப்பு |
| Tuesday, 10 June 2008 | ||||
சாதாரண தொலைபேசி மற்றும் செல்போன்களுக்கான எஸ்.டி.டி. கட்டணத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி சுலாப் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களுக்கான எஸ்.டி.டி. கட்டணம் நிமிடத்துக்கு ரூ. 2.40 லிருந்து டூ. 1.20 ஆக குறைக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் நிமிடத்துக்கு 80 பைசா மட்டுமே வசூலிக்கப்படும்.அனைத்து ப்ரி-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு செல்போன்களுக்கான ரோமிங் கட்டணம் ரூ. 1.75 லிருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்படுகிறது. சூப்பர் ஒன் இந்தியா திட்டத்துக்கான கட்டணமும் ரூ. 799லிருந்து ரூ. 299 ஆக குறைகிறது. மேலும் ஒயர்லெஸ் போன்களுக்கும் 50 சதவீத கட்டண குறைப்பு செய்யப்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் குல்தீப் கோயல் தெரிவித்தார். இதன்மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைவான எஸ்டிடி கட்டணம் கொண்ட சேவையை வழங்கும் தொலைபேசி நிறுவனம் என்ற பெயரை பிஎஸ்என்எல் பெற்றுள்ளது. பிஎஸ்என்எல்-லின் இந்த அதிரடியையடுத்து தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள தனியார் நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

சாதாரண தொலைபேசி மற்றும் செல்போன்களுக்கான எஸ்.டி.டி. கட்டணத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி சுலாப் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களுக்கான எஸ்.டி.டி. கட்டணம் நிமிடத்துக்கு ரூ. 2.40 லிருந்து டூ. 1.20 ஆக குறைக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் நிமிடத்துக்கு 80 பைசா மட்டுமே வசூலிக்கப்படும்.


