அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
குஜார்களின் 2 புதிய நிபந்தனைகள்
Wednesday, 11 June 2008
 பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தினர் கடந்த 15 நாட்களாக போராட்டம்நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40க்கும் அதிகமானோர் இறந்தனர். அண்டை மாநிலங்களுக்கும் இந்தப் போராட்டம் நடந்தது.

குஜார்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ராஜஸ்தான் அரசு குஜ்ஜார் பழங்குடியினருக்கு அழைபபு விடுத்தது. இதனை நிராகரித்த குஜ்ஜார் இன தலைவர் பைன்சாலா பின்பு பயானாவில்தான் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறி சம்மதித்தார்.

பேச்சுவார்த்தையில் பங்கேற்க குஜ்ஜார்கள் 2 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

நேற்று முன்தினம் குஜ்ஜார் இன பிரதிநிதிகளுடன் முதல் சுற்று பேச்சுவார்தை நடத்தியது. இதில் ராஜஸ்தான் அமைச்சர்கள் 2 பேர் பங்கேற்றனர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜெய்ப்பூரில் நடக்கும் என்றும் இதில் பங்கேற்போம் என்று அறிவித்த குஜ்ஜார் தலைவர் பைன்சாலா இதுவரை நடத்தி வந்த போராட்டங்கள் நிறுத்தப்படுவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் 2ம் சுற்று பேச்சுவார்த்தை பங்கேற்க 2 புதிய நிபந்தனைகளை பைன்சாலா விதித்துள்ளார். குஜ்ஜார்கள் நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 20 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்கை வாபஸ் பெற வேண்டும் அப்போதுதான் 2வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று பைன்சாலா தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் ஜெய்ப்பூரில் 2வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்புமாறு பைன்சாலாவுக்கு மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code