| அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும் |
| Thursday, 12 June 2008 | ||||
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. முன்னேற்றம் காண இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் அந்த நாட்டுடன் மட்டும் இன்றி ரஷியா பிரான்சு போன்ற பிற அணுசக்தி நாடுகளுடனும் புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். இவை இந்தியாவின் நலனை பாதுகாக்கும் வகையிலும் அமையும். தடைகளையும் முட்டுக்கட்டைகளையும்தாண்டி வரும் மாதங்களில் இந்த ஒப்பந்த்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை தெரிவித்தார். தற்போது பெட்ரோலிய பொருட்களின் தேவை அதிகரித்து இருப்பதாலும் இதனால் புதிய எண்ணை வளங்களை கண்டு அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும் உலகில் அதிகார போட்டியில் எண்ணை வளமும் முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறினார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


