அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பணவீக்கம்: மன்மோகன் மீது பா.ஜ.க. பாய்ச்சல்
Saturday, 14 June 2008

 சென்னை ஜுன்14: 

 

பணவீக்கம் 8.75 சதவீதமாக உயர்ந்ததற்கு மத்திய அரசை பா.ஜ.க. விமர்சித்து வருகிறது. இதனிடையே பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில் பணவீக்கம் உயர்வுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நிதி மந்திரி ப.சிதம்பரம் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோரே காரணம் என்றார்.

ஏற்கனவே நரசிம்மராவ் ஆட்சியின் போது மன்மோகன் சிங் நிதி மந்திரியாகவும் ப. சிதம்பரம் வர்த்தக மந்திரியாகவும் மாண்டெக் சிங் அலுவாலியாக நிதித்துறை செயலாளராகவும் இருந்த போத 1994-95ம் நிதி ஆண்டில் பணவீக்கம் 10 சதவீதத்துக்கும்மேல் உயர்த்தை சுட்டிக்காட்டினார்.

மேலும் இடது சாரிகளும் தனது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பணவீக்கம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நிலோட்பால் பாசு நமது நாட்டின் பொருளாதாரம் மிகமிக சிக்கலான நிலையில் உள்ளது இதிலிருந்து மீள கொள்கை மாற்றங்கள் மட்டுமே உதவும் என்றார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது. ஊரக வணிகத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றார்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code