அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
நெய்வேலி: வேலைநிறுத்தம் வாபஸ்
Tuesday, 17 June 2008
 புதுடெல்லி ஜுன் 17:

நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிரந்தரம் உள்பட பல கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த தொழிலாளர் பிரச்சனை பற்றி டெல்லியில் மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய நிலக்கரி துறை இணை மந்திரி சந்தோஷ் பக்ரோடியா கலந்து கொண்டார்.

5 ஆயிரம் பேரை தொழிற்சாலை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக ஆக்குவது என்றும் பணி மூம்பு அடிப்படையில் படிப்படியாக நிரந்தரம் செய்வது என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு சட்டரீதியாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஜீவா தொழிற்சங்கம் வற்புறுத்தியது. இதுபற்றி மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர் முகோபாத்யாயா தலைமையில் தொழிற்சங்கங்கள் மற்றும் நெய்வேலி நிர்வாகம் இடையே நேற்று பேச்சு வார்த்தை நடந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிலக்கரி துறை அமைச்சர் முன் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் என நெய்வேலி நிலக்கரி நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இரவு 11 மணி அளவில் தொழிற்சங்க தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அரசு சார்பில் மத்திய தொழிலாளர் நிலத்துறை முதன்மை ஆணையாளர் முகோபாத்யாயா சென்னை தலைமை தொழிலாளர் நில தலைமை துணை ஆணையாளர் மாத்யூ என்.எல்.சி. நிர்வாகத்துறை இயக்குனர் பாபுராவ் பொதுமுலாளர் முத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மகாதேவன் எம். சேகர் குப்புசாமி தண்டபாணி காண்டிராக்டர்கள் சார்பில் அசோக்குமார் லோகநாதன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code