அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
முலாயம்சிங் கை கொடுப்பாரா?
Friday, 20 June 2008
 புதுடெல்லி ஜுன் 20:

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் கடுமையாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு முன் சர்வதேச அணுசக்தி கழகத்துடன் உடன்பாடு செய்ய வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்ற உறுதியில் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாக உள்ளார். அதே அளவுக்கு உறுதியுடன் இடதுசாரிகள் எதிர்த்து வருகின்றனர். வரும் 25ம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளனர். அரசின் முடிவை தெளிவாக அறிவிக்காவிட்டால் அரசுக்க அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறவும் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையெ அரசைக் காக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இறங்கியுள்ளது.

முதல் கட்டமாக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் ஆதரவை தன் பக்கம் திருப்பும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

இதைத் தவிர இன்னொரு முக்கிய முயற்சியிலும் காங்கிரஸ் இறங்கியுள்ளது. அது முலாயம் சிங்கின் ஆதரவைப் பெறுவது.

மேலும் முலாயம் சிங்கின் ஆதரவைப் பெற்றால் ஆடசி கவிழ்வதைத் தடுக்க முடியும் என்பது காங்கிரசின் கணக்கு. விரைவில் சமாஜ் வாடிக் கட்சயின் பொதுச் செயலாளர் அமர்சிங்கை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர். தங்கனது ஆதரவை காங்கிரஸ் நாடினால் அதுகுறித்து பரிசீலிக்கப்படமு என சமாஜ்வாடிக் கட்சியும் தெரிவித்துள்ளது. தற்போது சமாஜ்வாடிக் கட்சிக்கு 39 எம்.பி.க்கள் உள்ளனர். இடது சாரிகளுக்கு 59 பேர் உள்ளனர். இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டால் முலாயம் சிங் ஆதரவு தர முன்வதால் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கக்கூடும்.

மேலும் ஜுன் 25ம் தேதிக்குப் பிறகு பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code