அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மன்மோகன்சிங் பதவி விலக முடிவா?
Saturday, 21 June 2008
 புதுடெல்லி ஜுன் 21:

அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக மன்மோகன் சிங் கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் மன்மோகன் சிங் கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் குறியாக உள்ளது.

தற்போது இடதுசாரிகள் தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடாது என கூறிவருகின்றனர். 59 எம்.பி.க்களை கொண்ட இடதுசாரி கட்சிகள் அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு தடை செய்ய வலியுறுத்திவருகின்றன. ஒப்பந்தத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என்று இடதுசாரி கட்சிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தன. இதற்காக வருகிற 25ம் தேதி வரை அவர்கள் கெடு விதித்து உள்ளனர்.

இதனிடையே பிரணாப் முகரிஜி இடதுசாரிகளுடன் தொடர்ந்து பேச்சுநடத்தி வருகிறார். கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்துடன் அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை எதிலும் டுபடாத வரை மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அதன் முழு பதவிக்காலமும் ஆட்சியில் நீடிக்கும் என்றும் சரத்பவாரிடம் பிரகாஷ்காரத் உறுதியளித்ததாக தெரிகிறது.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code