அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பிரணாப் முகர்ஜி ஆஸ். பயணம்
Monday, 23 June 2008
 புதுடெல்லி ஜுன் 23:

அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் இடது சாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண சமரச முயற்சியில் டுபட்டு வரும் மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி இன்று ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு இன்று நடக்கவிருக்கும் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

இதில் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணு சக்தி உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை அதிக அளவில் தயாரிக்கும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா அணுஎரிபொருள் வினியோகம் செய்யும் 45 நாடுகளின் பட்டியலில் உள்ளது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமல்படுத்த ஆஸ்திருலியா உள்ளிட்ட இந்த நாடுகளின் ஒப்புதலையும் இந்தியா பெறவேண்டும். ஈ



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code