| ஐ.மு.கூ.-இடதுசாரிகள்: முக்கிய ஆலோசனை |
| Wednesday, 25 June 2008 | ||||
புதுடெல்லி ஜுன் 25:அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் உடனபாடு ஏற்படுமா அல்லது இடதுசாரிகள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுமா என்பது இன்று இறுதியாக தெரியவரும். அணுசக்தி ஒப்பந்தம் இடதுசாரிகள் மற்றும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள விவகாரத்தில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஒப்பந்தம் கண்டிப்பாக அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக உள்ளார். ஆனால் ஒப்பந்தத்தை அப்படியே கைவிட வேண்டும் என இடதுசாரிகள் பிடிவாதமாக உள்ளனர். இவர்களுக்கு இடையே சிக்கித் தவிப்பது இப்போது காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள்தான். காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் தற்போது தேர்தலை விரும்பவில்லை. இதையடுத்து நேற்று நடைபெற்ற மத்திய அரசு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சமரசத் திட்டத்தை இடதுசாரிகள் நிராகரித்துவிட்டனர். இப்படி அனைத்து வகையிலும் இன்னும் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு வெளியுறவுத் துறைஅமைச்சர் பிரணாப் முகர்ஜி இல்லத்தில் இக்கூட்டம் நடைபெறும். இன்று நடைபெறும் இன்றைய கூட்டம் நடக்குமா நடந்தாலும் அதில் உடன்பாடு ஏற்படுமா ஏற்படாவிட்டால் இடதுசாரிகள் என்ன முடிவு எடுக்கப்படும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி ஜுன் 25:


