| சோனியாவுடன் பிரதமர் அவசர ஆலோசனை |
| Thursday, 26 June 2008 | ||||
அணுசக்தி ஒப்பந்தம் பற்றி சோனியாகாந்தியுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.நேற்று நடந்த ஐ.மு. கூட்டணி-இடதுசாரி கட்சிகள் கமிட்டி கூட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எந்த முடிவும் ஏற்படவில்லை. இக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி - இடதுசாரிகள் கமிட்டியில் நடைபெற்ற விவாதங்கள் பற்றி ஏ.கே. அந்தோணியும் பிரணாப் முகர்ஜியும் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. இதற்கிடையே மத்திய திடடக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை திடீரென அடுத்தடுத்து 2 முறை சந்தித்து பேசினார். மேலும் சோனியாகாந்தியையும் அவர் சந்தித்தார். இச்சந்திப்புகளின் போது என்ன பேசப்பட்டது? என்பது பற்றி அரசு தரப்பில் எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

அணுசக்தி ஒப்பந்தம் பற்றி சோனியாகாந்தியுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.


