| திருவனந்தபுரத்தில் இன்று முழு அடைப்பு |
| Friday, 27 June 2008 | ||||
திருவனந்தபுரம் ஜுன் 27:கேரளாவில் 7ம் வகுப்பு பாடபுத்தகத்தில் கம்யூனிசக்கொள்கை புகுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பாடப்பிரிவை மாற்ற வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சகிளான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தின் போது தடியடி நடத்துவது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசுவது போன்ற சம்பங்கள் போன்றவை அடிக்கடி நடந்துக்கொண்டிருக்கின்றன. நேற்றுமுன்தினம் தலைமை செயலகம் முன்பு சர்ச்சைக்குரிய பாட பிரிவை நீக்கக்கோரி பாரதீய ஜனதாவனி இளைஞர் அமைப்பைச் சேர்ந்த 200 தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது என்.ஜி.ஓ. சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தலைமை செயலகம் நோக்கி ஆர்ப்பாட்டமாக வந்தனர். அப்போது இரு தரப்பிலும் ஒருவர் மீது ஒருவர் மாறி கற்களை வீசினர். போலீசார் தடியடி நடத்தி என்.ஜி.ஓ சங்கத்தினரை கலைந்து போகச் செய்தனர். அதன்பிறகு பா.ஜ.க.வினர் தர்ணாவை தொடர்ந்தனர். மேலும் கலவரம் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் போலீசார் மோதலில் ஈடுபட்டவர்கள்மீது புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் பா.ஜ.க.வினரும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் நாலாபுறமும் சிதறி தலைதெறிக்க ஓடினார்கள். இதனால் தலைமைச் செயலக மைதானம் போர்க்களமாக காட்சியளித்தது. இதில் பா.ஜ.மாவட்ட தலைவர் சிவன்குட்டி உள்பட 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களின் போலீசாரும் அடங்குவர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று திருவனந்தபுரத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதன்படி இன்று திருவனந்தபுரத்தில் கடைஅடைப்பு நடந்தது.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

திருவனந்தபுரம் ஜுன் 27:


