அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
காங்கிரஸ் கூட்டணியில் முலாயம்சிங்?
Monday, 30 June 2008
 புதுடெல்லி ஜுன் 30:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஜுலை 3ம் தேதி நடைபெறும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று சமாஜ்வாடிக் கட்சித் லைவர் முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை முடிவுசெய்தால் ஆதரவுவாபஸ் என பிரகாஷ் காரத் நேற்று அறிவித்த அறிவிப்பால் தற்போது மத்தியஅரசுக்கு பெரும் நெருக்கடி உள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழாமல் காப்பாற்ற தற்போதைக்கு சமாஜ்வாடிக் கட்சியை மட்டுமே நம்பியுள்ளது மத்தியஅரசு.

கூட்டணி குறித்து சோனியா சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை இரு முறை சந்தித்து பேசியதாக தெரிகிறது.

பின் செய்தியாளர்களிடையே பேசுகையில்

காங்கிரசுடன் எங்களுக்கு கொள்கை ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் பல முரண்பாடுகள் உள்ளன. இருப்பினும் மக்கள் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிப்போம். அதற்கேற்ப செயல்படுவோம். ஜுலை 3ம் தேதி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. அப்போது இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம் என்றார்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code