| மும்பை: பலத்தமழை-போக்குவரத்து பாதிப்பு |
| Wednesday, 02 July 2008 | ||||
மும்பை ஜுலை 2:மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளம் ஓடுகிறது. மழை காரணமாக ரெயில் மற்றும் விமான போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது இதனால் அந்தேரி பாந்தரா சியொன் செம்பூர் கத்கோபூர் போன்ற பகுதிகளில் மட்டும் 200 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக மும்பையில் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மும்பை - பூனே நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி கிடந்ததால் பல்வேறு ரெயில் சேவைகளை மத்திய ரெயில்வே ரத்து செய்தது. மும்பையை தொடர்ந்து புனே நகரிலும் மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

மும்பை ஜுலை 2:


