| 6ம் தேதி பிரதமர் ஜப்பான் பயணம் |
| Thursday, 03 July 2008 | ||||
|
புதுடெல்லி ஜுலை 3: மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை எப்போது வாபஸ் பெறுவது என்பது குறித்து வரும் 4ம் தேதி முடிவெடுக்கப்படும் என இடதுசாரிகள் அறிவித்துவிட்டன. வரும் 7ம் தேதி ஜப்பானில் நடக்கும் ஜி-8 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். இதற்காக 6ம் தேதி அவர் ஜப்பான் புறப்படுகிறார்.ஜி-8 என்பது அமெரிக்கா ஜப்பான் பிரான்ஸ் ஜெர்மனி இங்கிலாந்து கனடா இத்தாலி ரஷ்யாவை உள்ளடக்கிய நாடுகளின் அமைப்பு. இந்த அமைப்பில் சீனா இந்தியா பிரேசில் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளன. மேலும் ஜப்பானில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் புஷ் ஐ.ஏ.இ.ஏ தலைவர் முகம்மத் அல் பாரடாய் ஆகியொருடன் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்தும் பேச பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். ஜி-8 மாநாட்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என இடதுசாரிகள் கருதுகின்றன. இதுதொடர்பாக பிரகாஷ் காரத் பேசுகையில்: இந்தியா - அமெரிக்க அணு ஒப்பந்தத்தை ஏற்கவே மாட்டோம் மேலும் அரசு அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற தீவிர ஏற்பாடு செய்வதையடுத்து இனியும் இவர்களை ஆதரிக்க முடியாது. ஆதரவை வாபஸ் பெறுவது தான் ஒரே வழி. ஆதவை வாபஸ் பெறுவது தொடர்பாக வரும் 4ம் தேதி கூடும் இடதுசாரி கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார். மத்திய அரசுக்கு நெருக்கடி: இடதுசாரிகள் தங்கள் ஆதரவை விளக்கிக்கொண்டால் மத்தியல் ஆளும் அரசுக்கு நெருக்கடி நிலை உருவாகும். இதை சமாளிக்க 39 எம்.பி.க்களைக் கொண்ட முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி மத்திய அரசை ஆதரிப்பது உறுதியாகியுள்ள நிலையில் மெஜாரிட்டி பலம் கிடைப்பதற்கு மேலும் 7 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். அதற்காக 5 சுயேச்சை எம்.பி.க்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அத்துடன் சிறிய கட்சிகளான அஜீத்சிங்கின் ராஷ்டிரீய லோக்தளம் (3 எம்.பி.க்கள்) தேசிய மாநாடு (2) தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் (3) தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (3) ஆகிய கடச்களின் ஆதரவை பெறவும் காங்கிரஷ் தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

வரும் 7ம் தேதி ஜப்பானில் நடக்கும் ஜி-8 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். இதற்காக 6ம் தேதி அவர் ஜப்பான் புறப்படுகிறார்.


