| பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அபாயம் |
| Saturday, 05 July 2008 | ||||
புதுடெல்லி ஜுலை 5:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலைகள் உயர்ந்து வருகின்றன. நேற்று கச்சா எண்ணை விலை ஒரு பீப்பாய் 146 டாலராக உயர்ந்தது. ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் 19வது உலக பெட்ரோலியம் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்ற அமைச்சர் தியொரா கூறியதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் நடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும். அப்படி பாதிக்கப்பட்டால் அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் டீசல் விலைகளை மீண்டும் மாற்றி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். ஜுன் மாதம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அப்போதே அக்டோபர் மாதத்தில் மீண்டும் விலை நிலவரங்களை பரிசீலிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு தியோரா கூறினார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி ஜுலை 5:


