அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அபாயம்
Saturday, 05 July 2008
 புதுடெல்லி ஜுலை 5:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலைகள் உயர்ந்து வருகின்றன. நேற்று கச்சா எண்ணை விலை ஒரு பீப்பாய் 146 டாலராக உயர்ந்தது.

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் 19வது உலக பெட்ரோலியம் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்ற அமைச்சர் தியொரா கூறியதாவது:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் நடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும். அப்படி பாதிக்கப்பட்டால் அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் டீசல் விலைகளை மீண்டும் மாற்றி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

ஜுன் மாதம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அப்போதே அக்டோபர் மாதத்தில் மீண்டும் விலை நிலவரங்களை பரிசீலிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு தியோரா கூறினார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code