அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மன்மோகன்-புஷ் 9ம் தேதி சந்திப்பு
Monday, 07 July 2008

புதுடெல்லி ஜுலை 7:

 

பிரதமர் மன்மோகன்சிங்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் ஜப்பானில் 9ந் தேதி சந்தித்து பேசுகிறார்கள். அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பது பற்றி அப்போது இருவரும் பேச்சு நடத்துகிறார்கள்.

சர்வதேச அணுசக்தி கழகத்துடன் உடனாபடு செய்தால் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 7ந் தேதிக்குள் அதுபற்றி மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் இடதுசாரிகள் கெடு விதித்திருந்தனர்.

ஆனால் மத்திய அரசிடமிருந்து விளக்கம் அளிக்கவில்லை. இதனால் இடதுசாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் ஆதரவை வாபஸ் பெற மாட்டார்கள் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

தற்போது சமாஜ்வாடி மற்றும் சில சிறிய கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை தக்க வைகக காங். தீவிரமாக முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறது. இதன் மூலம் இடதுசாரிகளை ஓரங்கட்டலாம் என அக்கட்சி கருதுகிறது. சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளதால் காங். புதிய தெம்புடன் இருப்பதாக தெரிகிறது.

மத்திய அரசு தற்போது அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறத் தொடங்கி உள்ளது. இந்த ஒப்பந்தத்தை நிறைறேற முதலில் சர்வதேச அணுசக்தி கழகம் ஒப்புதல் பெறவேண்டும். அதைத்தொடர்ந்து யுரேனியம் சப்ளை செய்யும் நாடுகளின் சம்மதத்தை இந்தியா பெறவேண்டும்.

இதன் முதல் நடவடிக்கையாக சர்வதேச அணுசக்தி ஒப்பந்த கழகத்துடன் இந்தியா அடுத்த மாதம் பேச உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும்படி அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்சை பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்த உள்ளார். இதற்காக அவர் இன்று ஜப்பான் நாட்டில் நடக்கும் ஜி-8 மாநாட்டுக்கு செல்கிறார். பிரதமர் ஜப்பான் பயணம் மூலம் அணுசக்தி ஒப்பந்தம் வரபோவது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது தேசிய அரசியலில் பெரும் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code