| இந்திய உயர்மட்டக் குழு விரைந்தது! |
| Tuesday, 08 July 2008 | ||||
ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்காக இந்திய உயரதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு விரைந்தது.ஆப்கான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய அயலுறவு அதிகாரி, ராணுவ அதிகாரி ஆகியோர் உள்ளிட்ட 4 இந்தியர்கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தாக்குதல் நடந்த இடத்தில் நிலவும் சூழ்நிலையை ஆராய்வதற்காக மத்திய அயலுறவு அமைச்சகச் செயலர் நலின் சூரி தலைமையிலான உயர்மட்டக் குழு ஆப்கான் விரைந்தது. இக்குழுவில் உள்துறை அமைச்சக அதிகாரிகளும், அயலுறவு அமைச்சக அதிகாரிகளும் உள்ளனர். இவர்கள் ஆப்கானில் பணியாற்றும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பளிப்பது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்கள். சோனியா காந்தி கண்டனம்! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மீதான தற்கொலைத் தாக்குதலிற்கு அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தாருக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்காக இந்திய உயரதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு விரைந்தது.


