| ஆதரவு வாபஸ்: இடதுசாரிகள் இன்று கடிதம் |
| Wednesday, 09 July 2008 | ||||
டெல்லி ஜுலை 9:ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறுவது தொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் இன்று இடதுசாரி தலைவர்கள் வழங்கவுள்ளனர். இடதுசாரிகள் கடந்த 4 வருடங்களாக நீடித்து வந்த இழுபறி நேற்று முடிவுக்கு வந்தது. இதில் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக நேற்று இடதுசாரி தலைவர்கள் அறிவித்தனர். இதுதொடர்பான முறைப்படியான கடிதத்தை இன்று குடியரசுத்தலைவரை சந்தித்து வழங்கவுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அறிவித்தார். சமாஜ்வாடி உறுதி: மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்ற நிலையில் சமாஜ்வாடி கட்சியின் 39 எம்.பி.க்கள் ஆதரவு மிகுநத முக்கியத்துவம் பெறுகிறது. அரசை ஆதரிக்கபோவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் பொதுச்செயலாளர் அமர்சிங் ஆகியோர் ஏற்கனவே அறிவித்துவிட்டனர். பிரதமர் மன்மோகன்சிங்: மொத்தம் 545 இடங்களைக் கொண்டுள்ள பார்லிமென்ட்டில் ஐ.மு. கூட்டணியின் பலம் இதுவரை 295 ஆக இருந்தது இடதுசாரிகள் வாபஸ் பெற்றுள்ளதால் இந்த பலம் 234 ஆக குறைந்துள்ளது. தனி மெஜாரிட்டிக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் சமாஜ்வாடி ஆதரவளித்தாலும் உதிரிக் கட்சிகளின் ஆதரவும் அரசுக்கு தேவைப்படுகிறது. அரசுக்கு ஆபத்து இல்லை. பார்லிமென்ட்டில் பெரும்பான்மையை உறுதி செய்வோம் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

டெல்லி ஜுலை 9:


