அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு?!
Saturday, 12 July 2008
 டெல்லி: நம்பிக்கை வாக்கு கோருவதற்காக வரும் 21ம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தைக் கூட்டும் எனத் தெரிகிறது. 22ம் தேதி நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கலாம்.

லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர தனது அரசு தயாராக இருப்பதாகவும், தனது அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் பிரதமர் தெரிவித்தார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஜூலை 21ம் தேதி கூடும் என தெரிய வந்துள்ளது. 22ம் தேதி நம்பிக்கை ஓட்‌டெடுப்பு நடைபெறுகிறது.

மேலும் இன்று காலை பிரதமரின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாலையில் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code