| நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும் |
| Monday, 14 July 2008 | ||||
புதுடெல்லி: ஜுலை 14:பாராளுமன்றத்தில் வரும் 22ந் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக அரசுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் டுபட்டுள்ளனர். இதனிடையெ மத்திய அரசு எதிராக இடதுசாரிக்கட்சிகளும் மாநில கட்சிகளை ஓரணியில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக அவர் நேற்று பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்து பேசினார் இச்சந்திப்பு சுமார் 45 நிமிடம் ஓட்டெடுப்பின் போது காங்கிரசை வீழ்த்துவது குறித்து ஆலோசித்தனர். இதில் உத்திரபிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்களை பிரித்து தங்கள் பக்கம் இழுப்பது குறித்து பிரகாஷ் காரத்தும் மாயாவதியும் வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் காங்கிரசை உடைக்க மாயாவதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது காங்கிரசை எதிர்த்து அனைவருமு ஓரணியில் நின்று செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் சனிக்கிழமை இடதுசாரிகள் பகுஜன் சமாஜ் கட்சி 3வது அணி தலைவர்கள் டெல்லியில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். நம்பிக்கை ஓட்டெடுப்பில் காங்கிரஸ் கூட்டணி அரசை தோற்கடிக்க இதுவரை பாரதீய ஜனதா கட்சி வெளிப்படையான எந்த பெரிய நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இடதுசாரிகள் மட்டுமே இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக தீவிரமாக உள்ளனர். இடதுசாரி கட்சி தலைவர்களில் சிலர் ரகசியமாக பா.ஜ.க. தலைவர்களுடன் பேசி முடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மொத்தம் உள்ள 543 எம்.பி.க்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக 268 எம்.பி.க்களும் எதிராக 266 எம்.பி.க்களும் உள்ளனர்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி: ஜுலை 14:


