| நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள் |
| Friday, 18 July 2008 | ||||
புதுடெல்லி ஜுலை 18:பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் எம்.பி.க்களுக்கு நாளை முதல் 22ந் தேதி வரை 4 நாட்கள் முக்கிய கட்சிகள் விருந்து அளிக்க உள்ளன. தங்களுக்கு ஆதரவாக உள்ள எம்.பி.க்களையும் இந்த விருந்தில் பங்கேற்க செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 22ந் தேதி நடைபெறவுள்ள ஓட்டுடெடுப்பில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்துவருகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு 261 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. பா.ஜ.க. கூட்டணிக்கு 259 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. பா.ஜ.க. காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் 12 முதல் 15 எம்.பி.க்கள் வரை ஆதரவு தேவைப்படுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (5) மதச்சார்பற்ற ஜனதாதளம் (2) ராஷ்டிரிய லோக் தளம் (3) தேசிய மாநாட்டு கட்சி (2) மற்றும் 3 சுயேட்சைகள் ஓட்டு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் தான் வெற்றி பெற இயலும். மற்றும் சிறு கட்சிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் முடிவை அறிவிக்க உள்ளன. அதை பொறுத்தே காங்கிரஸ் அரசு வாழுமா அல்லது வீழுமா என்பது தெரியவரும்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி ஜுலை 18:


