|
ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
|
|
Monday, 21 July 2008 |
|
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்னும் பெரும்பான்மை பலத்திற்குத் தேவையான எம்.பிக்களை பெறவில்லை. மேலும் எதிரணியை விட ஒரு எம்.பி மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு பிழைக்குமா, பிழைக்காதா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள். அவர் இங்கே தாவுகிறார், இவர் அங்கே போகிறார் என்ற செய்திகள். யாருக்கு எத்தனை பேர் ஆதரவு என்பதில் நிலையில்லாத நிலை என டெல்லி வட்டாரத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் எந்த அணிக்கு எத்தனை பேர் உறுதியாக உள்ளனர் என்பதை திட்டவட்டமாக கணித்துக் கூற முடியாத குழப்ப நிலை.
நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் நேற்று மாலை நிலவரப்படி நாடாளுமன்றத்தில் கட்சிகளுக்குள்ள ஆதரவு எம்.பிக்களின் விவரம்:
மொத்த உறுப்பினர்கள் - 541 பெரும்பான்மைக்குத் தேவை - 271.
அரசுக்கு ஆதரவு:
காங்கிரஸ் - 151 சமாஜ்வாடி - 35 ஆர்.ஜே.டி. - 24 திமுக - 16 தேசியவாத காங். - 11 பாமக - 6 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 5 லோக் ஜனசக்தி - 4 அதிருப்தி மதிமுக - 2 அதிருப்தி பாஜக - 2 அதிருப்தி ஐக்கிய ஜனதாதளம் - 2 சுயேச்சைகள் - 2 அகில இந்திய மஜ்லிஸ் - 1 பாரதீய நவ சக்தி - 1 மக்கள் ஜனநாயக கட்சி - 1 சிக்கிம் ஜனநாயக முன்னணி - 1 கேரளா முஸ்லீம் லீக் - 1 இந்திய குடியரசுக் கட்சி - 1
மொத்தம் - 266
எதிர் அணி:
பாஜக - 128 சிபிஎம் - 41 பகுஜன் சமாஜ் கட்சி - 17 சிவசேனா - 12 பிஜூ ஜனதாதளம் - 11 சிபிஐ - 10 சிரோன்மணி அகாலிதளம் - 8 ஐக்கிய ஜனதாதளம் - 6 தெலுங்கு தேசம் - 5 அதிருப்தி சமாஜ்வாடி - 4 ஆர்.எஸ்.பி. - 3 பார்வர்ட் பிளாக் - 3 ராஷ்ரடிரிய லோக் தளம் - 3 மதச்சார்பற்ற ஜனதாதளம் - 3 தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 3 அசாம் கண பரிஷத் - 2 மதிமுக - 2 அதிருப்தி காங். - 2 கேரளா காங்கிரஸ் - 1 சுயேச்சை - 1
மொத்தம் - 265
மதில் மேல் பூணை:
தேசிய மாநாடு கட்சி - 2 திரிணமூல் காங்கிரஸ் - 1 சுயேச்சைகள்- 3 சிறிய கட்சிகள்- 4 எம்.பிக்கள்
இந்த வரிசையில் கடைசி நேர தாவல்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது. எனவே யாருக்கு எவ்வளவு பேர் ஆதரவு என்பது வாக்கெடுப்புக்குப் பின்னர்தான் தெரிய வரும்.
|