அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
Friday, 25 July 2008

 புதுடெல்லி ஜுலை 25:


அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவது குறித்துப் பேசினார்.

இது குறித்து, அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜான்டிரோ கூறுகையி்ல்,

இந்த உரையாடலின்போது இரு நாட்டு தலைவர்களும் அணுசக்தி ஒப்பந்தத்தை எவ்வளவு விரைவாக நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவு விரைவாக நிறைவேற்றுவது என முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவுடனான ராணுவ நட்புறவை பலப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

மேலும் தோஹாவில் நடக்கும் உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தைகளில் நிலவும் தடைகளைக் களைவது குறித்தும் பேச்சு நடத்தினர் என்றார்.

ரைசுடன் சர்மா சந்திப்பு:

இந் நிலையில், ஆசியான் நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஆனந்த் சர்மா, அங்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலீசா ரைசை சந்தித்துப் பேசினார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code