அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
எனக்குப் பிடித்த எக் கட்லெட்
Thursday, 29 November 2007
 நாம் இதுவரை வெஜிடபிள் கட்லெட் சாப்பிட்டு பழகி இருப்போம்.  எக் கட்லெட் சாப்பிட வேண்டுமென்றால் கடைக்குத் தான் செல்ல வேண்டியிருக்கும். அந்த நிலைமை இப்ப மாறப்போகுது. இதோ  எக் கட்லெட் எப்படி செய்றதுனு இத படிச்சு தெரிந்துசுகிட்டு வீட்டில் நீங்களே தயார் செஞ்சுருங்க!

தேவையானப் பொருட்கள்

முட்டை          :  5
உருளைக்கிழங்கு   :  அரை கிலோ
பெரிய வெங்காயம்  :  ஒன்று
தேங்காய்பால்      :  அரைகப்
மிளகாய்தூள்(தனி)  :  ஒரு தேக்கரண்டி
மசாலாத் தூள்     :  ஒரு தேக்கரண்டி
மிளகுதூள்        :  ஒருடேபிள்ஸ்பூன்
மைதா           :  இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்        :  கால் லிட்டர்
உப்பு            : தேவையான அளவு
 
செய்முறை:

முட்டையும்  உருளைக்கிழங்கையும் ஒரே பாத்திரத்தில் வேகவைத்து  வெந்த பின் முட்டை ஓடையும்  உருளைக் கிழங்கு
தோலையும் நீக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வேகவைத்த முட்டையை இரண்டு சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது  உருளைக்கிழங்கை
நன்கு மசிந்து  அதனுடன் மிளகாய் மற்றும் மசாலாதூளைச் சேர்த்து பிசைந்து  அதனுடன் மைதா மாவையும் சேர்த்து ஒன்றாக்கி  தேங்காய் பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

இதற்கிடையே  ஒரு ஒரு முட்டையை மட்டும் மிளகு மற்றும் உப்புத் தூள் போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது  உருளைக் கிழங்கு கலவையை நன்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டைகளை கையில் வடைக்கு தட்டுவது போல் வட்டமாக தட்டி அதன் நடுவில் வெட்டி வைத்த முட்டையை வைத்து மூடி விட வேண்டும்.

இதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து எண்ணையில் போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

இதன் மீது பெரிய வெங்காயத்தை மிகப் பொடிதாக நறுக்கி தூவி விட்டால் பார்ப்பதற்கும்  சுவைப்பதற்கும் பிரமாதமாய் இருக்கும்.

இதனை மாலை நேர சிற்றுண்டியாகவும் பயன்படுத்தலாம். வீட்டில் ஏதேனும் விசேகம் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code