| சிக்கன் பிரைடு ரைஸ் |
| Thursday, 29 November 2007 | ||||
தேவையானப் பொருட்கள்:பச்சரிசி : அரை கிலோ (அ) பாசுமதி அரிசி கோழி : நூற்றைம்பது கிராம் முட்டை : நான்கு வெங்காயம் : ஒன்று வெங்காயத்தாள் : இரண்டு பச்சைமிளகாய் : இரண்டு இஞ்சி : சிறிய துண்டு பூண்டு : நான்குபற்கள் பச்சைப்பட்டாணி : அரை கோப்பை சோயா சாஸ் : இரண்டு மேசை கரண்டி மிளகுத்தூள் : ஒரு தேக்கரண்டி உப்புத்தூள் : இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி : ஒரு கட்டு செய்முறை: முதலில் அரிசியை உப்பு போட்டு அரைவேக்காடாக வடித்து நன்கு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். கோழியை சிறிது உப்பு போட்டு வேகவைத்து எலும்பில்லாமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டை தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் பச்சைமிளகாய் கொத்தமல்லியை நன்கு அரிந்து வைத்துக்கொள்ளவும். வாய்யகன்ற ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு நன்கு வறுக்க வேண்டும். பிறகு இஞ்சி பூண்டையும் பச்சைமிளகாயையும் போட்டு வதக்க வேண்டும். இதைத் தொடர்ந்து கோழி பச்சைபட்டாணியை போட்டு சிறிது வதக்கவும். கோழி நன்கு வதங்கியவுடன் இந்த கலவையின் மீது முட்டைகளை உடைத்து போட வேண்டும். இதன் மீது அதில் ஆறவைத்த சோற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும். இதன் மீது சோயா சாஸ் உப்புத்தூள் மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்கு கிளறவேண்டும். இப்போது சுடான சுவையான பிரைடு ரைஸ் தயார். இதன் மீது வெங்காயத்தாளையும்கொத்தமல்லியையும் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
Write Comment |
||||

தேவையானப் பொருட்கள்:

