அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ருசி மிகுந்த மீன் வறுவல்
Thursday, 29 November 2007
 அசைவப் பிரியர்களின் ஆவலைத் தூண்டும் மீன் வறுவல் எப்படித் தயாரிப்பது என்பதை இன்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

மீன்                  :  அரை கிலோ
மிளகாய்த்தூள்    : 4  டேபிள் ஸ்புன்
மஞ்சத்தூள்        :  1  தேக்கரண்டி
உப்புத்தூள்         :  1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு :  1 மேஜைக்கரண்டி
எண்ணெய்         :  100 மிலி
கான்பிளவர்       :  1தேக்கரண்டி

அரைத்து வைக்கத் தேவையானவை :

பூண்டு              :  5  பல்
சோம்பு             :  1 தேக்கரண்டி
தக்காளி            :  1
கருவேப்பிலை   :  சிறிது
 
செய்முறை:

முதலில் மீனை நன்கு கழுவி தேவையான அளவிற்கு சிறு சிறு துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.  பூண்டு சோம்பு கருவேப்பில்லை தக்காளி உப்பு ஆகியவற்றை அவற்றுடன் மிளகாய் தூள் மல்லித் தூள் மஞ்சள் தூள் சேர்த்து பிசறி இந்த கலவையில் கழுவிய மீன் துண்டங்களையும் சேர்த்து பிசறி சுமார் அரை மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

மேற்கூறிய கலவை மீன் வறுவல் பொடி என்ற பெயரில் ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது. என்றாலும் இதனை நாமே கையால் தயாரித்தால் ருசியும் மணமும் தூக்கலாக இருக்கும்.

மசாலா கலவையுடன் மீன் நன்றாக ஊறியவுடன் வாணலி ஒன்றில் எண்ணைவிட்டு காய்ந்ததும் மீன் துண்டங்கள் ஒவ்வொன்றாக இட்டு வறுக்க வேண்டும். நன்கு சிவந்தவுடன் எடுக்க வேண்டும்.

லேசாக சூடு குறைந்தவுடன் சுவைத்துப் பாருங்கள். சுவை ஆளைத் தூக்கும். என்ன இப்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதா...

முயற்சித்துப் பாருங்களேன்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code