அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
நண்டு கிரேவி
Thursday, 13 December 2007

 அசைவ உணவில் நண்டை விரும்பி உண்பவர்கள் ஏராளம். ஆறு, குளங்களை விட கடல் நண்டிற்குத்தான் மவுசு அதிகம். நண்டின் ஓட்டுப் பகுதியில் கால்சியச் சத்தும், அதன் சதைப்  பகுதியில் கார்போஹைடிரேட்டும் அதிகள் உள்ளது.

இன்று நண்டு கிரேவி எப்படி வைப்பது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையானப் பொருட்கள்

நண்டு        :   அரை கிலோ
மிளகாய்த்தூள்     :   2 டீஸ்பூன்,
மல்லித்தூள்    :   3 டீஸ்பூன்,
தேங்காய் துருவல்    :   1 கப்
சோம்பு        :   2 டீஸ்பூன்
தாளிக்கும் வடகம்    :   தேவையான அளவு
உப்பு, கறிவேப்பிலை: தேவையான அளவு.
 
செய்முறை

நல்ல வகை கடல் நண்டினை வாங்கி வந்து அதனை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் துருவல் மற்றும்  சோம்பு இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணைய் ஊறி லேசாக கொதித்ததும் அதில் முன்பே எடுத்து வைத்திருந்த வடகத்தை போட்டு தாளிக்க வேண்டும்.

வடகம் நன்கு பொரிந்ததும், அதனுடன் நண்டை போட்டு வதக்கவும். இதனுடன் மிளகாய்தூள், மல்லிதூள் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். இந்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரைத்த தேங்காய், சோம்பு விழுதினை சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நண்டு வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கினால் சுவையான கிரேவி தயார்.


 




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code