| தக்காளி ஆம்லெட் |
| Wednesday, 19 December 2007 | ||||
|
பொதுவாக முட்டை ஆம்லேட் போட எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.. அதென்ன தக்காளி ஆம்லேட் ? இதோ பார்ப்போம் தேவையானப் பொருட்கள் ![]() முட்டை - இரண்டு நாட்டு தக்காளி : ஒன்று பெரியது பச்சை மிளகாய் : 1 பொடியாக நறுக்கியது சீரகம், மிளகு சேர்த்து அரைத்த கலவை : கால் தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் : அரை தேக்கரண்டி கருவேப்பிலை : இரண்டு முன்று பொடியாக அரிந்தது உப்பு - தேவையான அளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டை உடைத்து ஊற்ற வேண்டும். இதனுடன் சீரகம்,மிளகு கலவை தூளையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர், அதனுடன் மற்ற பொருடகளையும் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அடிக்கவும். தக்காளியை சிறிய துண்டுகளா நறுக்கி போட்டு அடிக்க வேண்டும். இப்போது, தோசை கல்லில் எண்ணைய் அல்லது ஊற்றி லேசாக காய்ந்ததும் அதில் கலக்கிய முட்டை கலவையை ஊற்ற வேண்டும். கருக விடாமல் இளஞ்சிவப்பு நிறம் வந்தவுடன் எடுத்து மறுபுறம் திருப்பி போட்டு எடுக்கவும். சாதாரண ஆம்லேட்டை விட இது மிக ருசியாக இருக்கும்.
Write Comment |
||||




