|
செட்டிநாடு சிக்கன் செய்வதெப்படி?
|
|
Wednesday, 26 December 2007 |
|
அசைவ உணவுகளில் செட்டிநாட்டு சமையல் தனி ருசிதான். அதிலும் சிக்கன் என்றால் கேட்கவே வேண்டாம். இதோ, செட்டிநாடு சிக்கன் எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையானவை :
சிக்கன் : கால் கிலோ பெரிய வெங்காயம் : 2 தக்காளி : 2 பச்சை மிளகாய் : 1 சின்ன வெங்காயம் : 1 கைப்பிடி சீரகம் : 1 தேக்கரண்டி சோம்பு : 1 தேக்கரண்டி, மிளகு : 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை : கொஞ்சம் கொத்தமல்லி தழை : கொஞசம் எண்ணெய் : 2 தேக்கரண்டி, உப்பு : தேவையான அளவு. செய்முறை
கோழிக்கறியை கொழுப்பு, தோல் இல்லாமல் சுத்தம் செய்து, அதனை சுமார் 10 நிமிடத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
இக்கலவையை நன்கு விழுதுகளாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். இப்போது வாணலியில் மீண்டும் சிறிது எண்ணையை விட்டு, பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். இந்த கலவையில், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள விழுதினைச் சேர்த்து வதக்கவும். இவைகளுடன் வேகவைத்த சிக்கன் கறியை போட்டு அதனுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வாசனைக்கு பட்டை கிராம்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
நன்கு வெந்த பின்னர், அந்த கலவை மீது அரிந்து வைத்திருந்த கொத்தமல்லியை தூவி அழகு படுத்தி சாப்பிட வைக்கலாம்.
|