அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மணக்கும் 'மட்டன் சாப்ஸ்'
Wednesday, 02 January 2008

தேவையான பொருட்கள்

கறி            :    அரை கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட்    :    ஒரு தேக்கரண்டி

பச்ச மிளகாய்        :    இரண்டு

மிளகு தூள்        :    ஒரு தேக்கரண்டி

தனியா தூள்        :    ஒரு தேக்கரண்டி

உப்பு            :    தேவையான அளவு

எண்ணை        :    இரண்டு தேக்கரண்டி

கருவேப்பிலை        :    சிறிது

கரம் மசால தூள்        :    கால் தேக்கரண்டி
 
செய்முறை


எலும்பில்லாத கறியை நன்றாக கழுவி அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து பிசற வேண்டும். அதனுடன் இரண்டு பச்சைமிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து அந்த கரைசலையும் சேர்க்க வேண்டும்.

குக்கரில் ஒரு கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதில் இந்த கலவையை போட்டு நன்றாக வேக விடவும். தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

இப்போது தோசைக் கல்லை எடுத்து அதில் இரண்டு கரண்டி எண்ணைய் ஊற்றி அதனுடன் சிறிது கறிவேப்பில்லை, கரம்மசாலா தூள் தூவி அதனுடன் வெந்த கறியை எடுத்துப் போட்டு நன்கு வறுக்கவும். கறி சிவக்கும் வரை வறுத்தால் மணக்கும் மட்டன் சாப்ஸ் தயார்.

விருப்பப்பட்டால் தோசைக் கல்லில் போட்டு வறுக்கும் போது சிறிது வெள்ளைப் பூண்டையும் சேர்த்துக் கொள்ளலாம். பிரியாணி, சப்பாத்தி, நான்  போன்ற உணவு வகைகளுக்கு இதனை சைட் டிஸ்ஸாகப் பயன்படுத்தலாம்.

வாசகர்களே!

இந்தப் பகுதியில் நீங்களும் உங்களுக்குத் தெரிந்த சுவையான  சமையல் டிப்ஸ், சமையல்

செய்முறை, போன்ற பயனுள்ள குறிப்புகளை 'இது உங்க ஏரியா' மூலம் அனுப்பி வைக்கலாம். அவை

உங்களது பெயருடன் இந்த தளத்தில் பிரசுரிக்கப்படும்.





Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code