அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மெரினா அழகுபடுத்தும்பணி: ரூ. 24 கோடி
Wednesday, 02 July 2008
 சென்னை ஜுலை 2:

ரூ. 24 கோடி செலவில் மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் பணி வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையை சிங்கார சென்னையாக உருவாக்க தலைமைச் செயலகம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை ஒரு பகுதியாகவும் அங்கிருந்து கலங்கரை விளக்கம் வரை மற்றொரு பகுதியாகவும் அங்கிருந்து எலியட்ஸ் கடற்கரை வரை வேறொரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் நடக்கிறது.

மெரினாவுக்கு வரும் அனைவருக்கும் இயற்கை எழிலைக் கண்டு மகிழ நடைபாதையில் துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கைப்பிடிகள் நடைபாதைகளில் பளிங்கு கற்கள் பதிப்பது கொரியன் வகை புல்வெளிகள் அமைப்பது அலங்கார நீருற்றுகள் அமைப்பது சிற்ப மாடங்கள் பொதுத் தொலைபேசியகங்கள் பேருந்து நிழற்குடை உணவு வளாகம் மலர்ச்செடிகள் நடுவது நவீன கழிப்பிடங்கள் கட்டுவது சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்களை அமைப்பது போன்ற பணிகள் நடக்கிறது.

இந்த பணிகளை உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் மெரினாவில் நேற்று ஆய்வு செய்தார்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code