அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தமிழகத்தில் டீசல் பற்றாக்குறைநீங்கியது
Thursday, 03 July 2008
சென்னை ஜுலை 03:

 சென்னை நகருக்கு பிபிசிஎல்லின் எண்ணை கப்பல் நேற்று வந்து சேர்ந்தது இதையடுத்து முதல் நடவடிக்கையாக சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு டீசல் சப்ளை முழு வீச்சில் தொடங்கியது.

டீசல் தட்டுப்பாட்டிற்கு காரணம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எண்ணை கப்பல் வந்து செராததே என்று கூறப்பட்டது. இந்தக் கப்பல் நேற்று காலைதான் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி எண்ணை ஏற்றிக் கொண்டு வந்த சம்பூர்ண ஸ்வராஜ்யா என் றபெயர் கொண்ட அக்கப்பல் நேற்று வந்து சேர்ந்தது. இதையடுத்து கப்பலிலிருந்து டீசலை எண்ணை நிறுவனங்களின் கிடங்குகளுக்கு மாற்றும் வேலை தொடங்கியது.

துறைமுகத்திலிருந்து தண்டையார்பேட்டையில் உள்ள பிபிசிஎல்லின் அயில் டெர்மினலுக்கு குழாய்கள் வழியாக டீசல் அனுப்பப்பட்டது.

துறைமுகத்தில் இருந்து ஆயில் டெர்மினல் வரைக்கும் போடப்பட்டுள்ள பைப் லைன் மூலம் டீசல் கொண்டு செல்லப்பட்டது. இநத் பணி நேற்று மதியம் சுமார் ஒரு மணிக்குத் தொடங்கியது. கப்பலில் உள்ள அனைத்து டீசலும் ஆயில் டெர்மினலுக்கு மாற்றப்படுகிறது. இதற்கு சுமார் 16 மணி நேரமாகும்.

டீசல் வரத்தொடங்கியதும் லாரிகள் மூலம் பங்க்குகளுக்கு சப்ளை செய்யும் பணியும் தொடங்கப்பட்டு விட்டது.

கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெட்ரோல் டீசல் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால் பெரும்பாலான அத்யாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுவந்தன. இந்நிலையில் டீசல் தேவை பூர்ததியான நிலையில் படிபடியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code