அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மருத்துவபடிப்பு:கவின்சிலிங் தொடங்கியது
Friday, 04 July 2008
 சென்னை ஜுலை 4:

மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. ரேங்க் பட்டியலில் முதல் 9 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள் அனைவரும் சென்னை மருத்துவ கல்லூரியையே தேர்வு செய்தார்கள்.

அரசு மருத்துவகல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளிலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் 12 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்தனர். ரேங்க் பட்டியல் கடந்த 27ந் தேதி வெளியிடப்பட்டது. முதல்கட்ட கவுன்சிலிங் ஜுலை 4ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே ரேங்க் பட்டியலில் முதல் 9 இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளுக்கு சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள மருத்தவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சிறப்பு கவுன்சிலிங் நடந்தது. அந்த 9 பேரும் சென்னை மருத்துவ்க கல்லூரியை தேர்வு செய்தார்கள்.

மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் 8ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல்கட்ட கவுன்சிலிங்கில் இடம் கிடைத்துள்ள மாணவ மாணவிகள் வருகிற 10ந் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரியில் உரிய கட்டணத்தை செலுத்தவேண்டும்.






Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code