| நள்ளிரவில் காடுவெட்டி குரு கைது |
| Saturday, 05 July 2008 | ||||
பா.ம.க. வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் சென்ற 200 போலீசார் கொண்ட படையினர் அவரை கைது செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏவான குரு கடந்த சில மாதங்களாக திமுக தலைவர்களை மிகக் கடுமையாக தாக்கி வந்தார். முதல்வர் கருணாநிதி மற்றும் மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தலைவர்களை பகிரங்கமாகத் தாக்கினார். மேலும் மத்திய அமைச்சர் ராஜாவை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை ஆணையரையும் கடுஐமயாகத் தாக்கி பேசினார். இதையடுத்து குருவின் பேச்சை காரணம்காட்டி பாமகவை கூட்டணியில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. மேலும் காடுவெடடி குரு கைது செய்யப்படகூடும் என பேச்சு எழுந்தது. ஆனால் அப்படி எந்த திட்டமும் இல்லை என காவல்துறை டி.ஜி.பியே கடந்த ஜுன் 23ம் தேதி தான் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக பிரமுகரை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பாமகவின் முக்கிய தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
Write Comment |
||||
மற்றவை
- 32,000 கோடியில் 2 மெகா மின் திட்டங்கள்
- அ.ஒ.: ம. பிரதிநிதிகள் ஒப்புதல்: தங்கபாலு!
- கருணாநிதி டெல்லி பயணம்!
- நலிந்த கலைஞர்களுக்கு நிதி: கருணாநிதி!
- இன்று முதல் தமிழகத்தில் மின்வெட்டு!
- நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்
- சினிமாவுக்கு நான் எதிரியல்ல: ராமதாஸ்!
- பாமக எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம்
- அரசு கேபிள் டி.வி. இன்று தொடக்கம்!
- தமிழக மீனவர்கள் பலி: த.அ.ஆலோசனை
பகுதி:: தமிழகம்

பா.ம.க. வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


