அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தமிழக காங்.: தங்கபாலு நியமனம்
Tuesday, 08 July 2008
 சென்னை ஜுலை 8:

தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து கிருஷ்ணசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் சேலம் லோக்சபாத் தொகுதி எம்.பி.யுமான தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரசுக்குப் புதிய தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் பல மாதங்களாகவே தீவிரமாக ஆலோசனை நடத்திவந்தன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி இந்த தகவலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழ்நாடு தவிர குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.வி. தங்கவேலு நியமிக்கப்பட்டதை அறிந்ததும் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை கூடினர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி தலைமையில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code