அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
செ.வி. நிலைய விரிவாக்கம்: தடையில்லை
Wednesday, 09 July 2008
 சென்னை ஜுலை 9:

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1070 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கான தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் 27ந் தேதி வழங்கப்பட்டது. அதிலர் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தலாம். வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனியார் நிறுவனம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விவாதத்தின் போது மனுதாரர் சார்பில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தகூடாது என்று கூறப்பட்டது.

மேலும் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விமான நிலை விரிவாக்கத்துக்கு தடை விதிக்க கோரும் எதிர்மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன்படி சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தலாம். விமான நிலைய விரிவாக்கத்துக்கு தடை இல்லை. அதற்கான நிலங்களை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி அரசு கையகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code