| பணிந்து விடமாட்டோம்: ராமதாஸ் |
| Friday, 11 July 2008 | ||||
சென்னை ஜுலை 11:அரசின் குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டி விமர்சித்து வரும் பா.ம.க.வை அரசியல் ரீதியாக சந்திக்க வழியின்றி அதை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த நடவடிககையை மேற்கொண்டிருக்கிறது. இதை கண்டு பணிந்துவிட மாட்டோம் மண்டியிடவும் மாட்டோம் என பா.ம.க. நிறுவனம் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு இந்திய தண்டனைச் சட்ட சாதாரணமான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுவே பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறப்படும் நிலையில் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. குருவை விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை அரசு ஏவி விட்டிருக்கிறது. ஜனவரி மாதம் வன்முறையை தூண்டும் வகையில் குரு பேசினார் என குரு மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதற்காக இதைவிட கடுமையாக குளித்தலையில் பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கும் அமைச்சர் கட்சிக்காரர்கள் மீது அந்த சட்டம் எப்போது பாயும்? அரசின் குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டி விமர்சித்து வரும் பாமகவை அரசியல் ரீதியாக சந்திக்க வழியின்றி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதைகண்டு பணிந்துவிட மாட்டோம் என ராமதாஸ் கூறினார்.
Write Comment |
||||
மற்றவை
- 32,000 கோடியில் 2 மெகா மின் திட்டங்கள்
- அ.ஒ.: ம. பிரதிநிதிகள் ஒப்புதல்: தங்கபாலு!
- கருணாநிதி டெல்லி பயணம்!
- நலிந்த கலைஞர்களுக்கு நிதி: கருணாநிதி!
- இன்று முதல் தமிழகத்தில் மின்வெட்டு!
- நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்
- சினிமாவுக்கு நான் எதிரியல்ல: ராமதாஸ்!
- பாமக எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம்
- அரசு கேபிள் டி.வி. இன்று தொடக்கம்!
- தமிழக மீனவர்கள் பலி: த.அ.ஆலோசனை
பகுதி:: தமிழகம்

சென்னை ஜுலை 11:


