| சினிமாவுக்கு நான் எதிரியல்ல: ராமதாஸ்! |
| Thursday, 17 July 2008 | ||||
சென்னை ஜுலை 17:''என்னை பற்றி தவறாக திரைஉலகில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் சினிமாவுக்கு எதிரியல்ல'' சென்னையில் நடந்த சந்தன வீரப்பன் பற்றிய சந்தனக்காடு தொடரின் வெற்றிவிழாவில் கலந்து கொண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், '' சந்தனகாடு தொடரில் உண்மையை உள்ளவாறே சொல்ல நினைத்தபோது, பல உண்மைச் செய்திகளை சொல்லமுடியாமல் போனதற்காக நானும், இயக்குனரும் வருத்தப்பட்டோம். உண்மை எப்போதுமே அதிகமாக கசக்கும். அதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் வாழ்கிறார்கள், ராஜ்குமாரை தவிர. உண்மையான வீரப்பனின் பேச்சை காட்டி இருக்கலாம். முயற்சித்தோம், முடியவில்லை. என்னை பற்றி தவறாக திரைஉலகில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் சினிமா துறைக்கு எதிரி என்று. நான் சினிமாவுக்கு எதிரியல்ல. சினிமா வேறு, தொலைக்காட்சி வேறு. சினிமாவில் உள்ளதை தொலைக்காட்சியில் 90 விழுக்காடு காட்டுவது கூடாது. எந்த நாட்டிலும் இப்படி செய்வது இல்லை. தொலைக்காட்சி தனி ஊடகம். திரைத்துறை தனி ஊடகம். இரண்டையும் மசாலாவாகக் கொடுப்பதைத்தான் எதிர்க்கிறோம் என்று ராமதாஸ் கூறினார்.
Write Comment |
||||
மற்றவை
- 32,000 கோடியில் 2 மெகா மின் திட்டங்கள்
- அ.ஒ.: ம. பிரதிநிதிகள் ஒப்புதல்: தங்கபாலு!
- கருணாநிதி டெல்லி பயணம்!
- நலிந்த கலைஞர்களுக்கு நிதி: கருணாநிதி!
- இன்று முதல் தமிழகத்தில் மின்வெட்டு!
- நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்
- சினிமாவுக்கு நான் எதிரியல்ல: ராமதாஸ்!
- பாமக எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம்
- அரசு கேபிள் டி.வி. இன்று தொடக்கம்!
- தமிழக மீனவர்கள் பலி: த.அ.ஆலோசனை
பகுதி:: தமிழகம்

சென்னை ஜுலை 17:


